Home தொழில் நுட்பம் சிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறன்பேசியாக ‘சோனி எக்ஸ்பீரியா Z2’ தேர்வு!

சிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறன்பேசியாக ‘சோனி எக்ஸ்பீரியா Z2’ தேர்வு!

556
0
SHARE
Ad

Sony z2ஏப்ரல் 10 – பிரபல செல்பேசி தயாரிப்பு நிறுவனமான சோனியின் புதிய Z2 திறன்பேசி மிகத் துல்லியமான புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கருவியாக பெயர் பதித்துள்ளது.

சோனியின் இந்த வகை திறன்பேசி அண்மையில் உலக செல்பேசி மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 20.7 மெகா பிக்ட்சல் கேமெரா கொண்ட இந்த திறன்பேசி முதல் இடத்தையும், நோக்கியாவின் 808 ப்யூர் வியூ திறன்பேசி இரண்டாவது இடத்தையும், சோனியின் முந்தைய தயாரிப்பான இஸட் 1 (Z1) திறன்பேசி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

இந்த சோதனையை டிஎக்ஸ்ஓ லேப்ஸ் (DxO Labs) என்ற நிறுவனம் நடத்தி முடிவுகளை அறிவித்தது.

#TamilSchoolmychoice

“இந்த சோனி Z2 திறன்பேசி அதன் முந்தைய Z1 திறன்பேசியை விட புகைப்படம் எடுப்பதில் பெரிதும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. சவாலான ஒளி நிறைந்த சூழ்நிலைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் கூட மிகத் துல்லியமாக தெரியும் அளவிற்கு தானியங்கியாக அதன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும் திறன் வாய்ந்தது.” என்று டிஎக்ஸ்ஓ அறிவித்துள்ளது.

எனினும், புதிதாக வெளிவர இருக்கும் சாம்சங் எஸ் 5 திறன்பேசியின் கேமரா குறித்து இன்னும் ஆய்வு செய்யவில்லை.

தற்போதைய சோதனையின் படி, ஐபோன் 5S நான்காவது இடத்திலும், சாம்சங் S4 ஐந்தாவது இடத்திலும், நோக்கியா லூமியா 1020 ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.