Home இந்தியா டெல்லியில் இன்று 3-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்!

டெல்லியில் இன்று 3-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்!

504
0
SHARE
Ad

1டெல்லி, ஏப்ரல் 10 – 3-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 91 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் 9 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இதில் 2 கட்ட தேர்தல் அமைதியாக முடிவடைந்துள்ளது. 3-வது கட்டமாக 14 மாநிலங்களில் 91 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 7- நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெல்லி மாநில பாரதிய ஜனதா தலைவர் ஹர்ஷ்வர்தன் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அஜய் மக்கான் புதுடெல்லி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் மீனாட்சி லெஹி களத்தில் உள்ளார்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஹரியானா, பீகார், மகாராஷ்டிரா, ஒடிஷா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒடிஷாவில் இன்றைய வாக்குப் பதிவை புறக்கணிக்கக் கோரி மாவோயிஸ்டுகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.