கோலாலம்பூர், பிப்.15- மலேசியா நாட்டில் பெரிதும் எதிர்ப்பாக்கப்படும் 13வது பொது தேர்தலில், எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நிகழக்கூடும் என தேர்தல் ஆணையம் ஆரூடம் செய்துள்ளது.
இதற்குக் காரணம், வழி நடத்துவதற்குரிய பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டிராத சில தரப்பினர்களால் கட்டுப்பாட்டிற்குட்படாத சில சம்பவங்கள் நிகழக்கூடும் என்று தேர்தல் ஆணைய துணை தலைவர் டத்தோ வான் அகமாட் வான் ஒமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, வாக்குச் சாவடிகளை பாதுகாக்கும் முகவர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகளாக இருப்பதோடு, அவர்களே தபால் வாக்குகளையும் தொடக்கத்திலேயே கிடைக்கப் பெறும் வாக்குகளையும் கண்காணிக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், தேர்தல் ஆணையம் சிறந்தவற்றையே வழங்கவும் அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.