Home இந்தியா தமிழகம் முழுவதும் 845 பேர் தேர்தல்களத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 845 பேர் தேர்தல்களத்தில் உள்ளனர்.

533
0
SHARE
Ad

6cb96248-d2dd-4fd8-b22a-95cc399a75ac_S_secvpfசென்னை, ஏப்ரல் 10 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் தமிழகம் முழுவதும் 845 பேர் களத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 107 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. 7-ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

நீலகிரியில் பிஜேபியின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் பாமக வேட்பாளர் மணிரத்தினத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட மணிரத்தினத்தின் மனைவி சீதா மணிரத்தினத்தின் வேட்பு மனு  ஏற்கப்பட்டது.

மொத்தம் 906 மனுக்கள் தகுதி உள்ளவையாக இருந்தன. இதில் 845 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்ப்பட்டது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது,

தமிழகத்தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 1. 261 மனுக்களில், இறுதியாக 906 மனுக்கள் தகுதி வாய்ந்தவையாக இருந்தது. இதில் 61 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதனால் இறுதியாக 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள் 789 பேரும், பெண்கள் 55 பேரும், ஒரு திருநங்கையும் அடங்குவர்.

இந்த விபரங்கள் மற்றும் வேட்பாளர் பட்டியல் விளக்கங்கள் இணையதளத்தில் www.elections.tn.gov.in/loksabha2014.htm என்ற அகபக்கத்தை பார்க்கலாம் எனக் கூறினார்.