Home வணிகம்/தொழில் நுட்பம் ‘டைடன் ஏரோ ஸ்பேஸ்’ நிறுவனத்தை கூகுள் வாங்கியது!

‘டைடன் ஏரோ ஸ்பேஸ்’ நிறுவனத்தை கூகுள் வாங்கியது!

448
0
SHARE
Ad

titan-aerospaceஏப்ரல் 15 – கூகுள் நிறுவனம் ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் ‘டைடன் ஏரோ ஸ்பேஸ்’ (Titan Aerospace) நிறுவனத்தை வாங்கியது. இது குறித்த அறிவிப்பினை வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிக்கைகாக, அதன் கூகுளுக்கான நிருபர் அலிஸ்டர் பார் அளித்துள்ளார்.

உலக அளவில் உள்ள மக்களுக்கு தங்கள் நிறுவனத்தையும், அதன் பயன்பாடுகளையும் கொண்டு செல்ல இந்த திட்டத்தினை முன் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

‘டைடன் ஏரோ ஸ்பேஸ்’ உருவாக்கும் ஆளில்லா விமானங்கள், வர்த்தக விமானங்கள் பறக்கும் பாதைகளுக்கு மேல், செயற்கைக் கோள்களின் சுற்று வட்டப்பாதைக்கு கீழ் நிலைத்து நிற்கும் திறன் கொண்டது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் விண்வெளியிலிருந்து மிக எளிதாக பூமியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையத்தின் சமிக்ஞைகளை அனுப்பமுடியும்.

இதனால் கூகுளின் பயன்பாடுகளான ‘கூகுள் மேப்’ (Google Maps) மற்றும் ‘கூகுள் எர்த்’ (Google Earth) போன்றவற்றின் தரவுகளை உடனுக்குடன் மேம்படுத்த முடியும்.

எதிர்கால இணையப் பயன்பாடுகளின் தேவை மற்றும் அவசியம் கருதி தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக சமிக்ஞைகளைப் பெற முடியாத அடர்ந்த மற்றும் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளிலும் (Remote Areas) இணையத்தை செயல்படுத்தமுடியும்.

மிக அதிநவீனமான இந்த திட்டத்தினை முதலில் செயல்படுத்தத் நினைத்தது நட்பு ஊடகமான ‘பேஸ்புக்’ (facebook) ஆகும். Project Loon என்ற பெயரில் கடந்த வருடமே இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.