Home இந்தியா நரேந்திர மோடி உள்பட எந்த அரசையும் ஆதரிக்க தயார் – ஜெகன்மோகன் ரெட்டி!

நரேந்திர மோடி உள்பட எந்த அரசையும் ஆதரிக்க தயார் – ஜெகன்மோகன் ரெட்டி!

487
0
SHARE
Ad

1194d65a-159d-4d5b-b188-124f45e45e27_S_secvpfஐதராபாத், ஏப்ரல் 15 – ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சீமாந்திரா வளர்ச்சிக்கு உதவினால் மத்தியில் நரேந்திர மோடி உள்பட எந்த அரசையும் ஆதரிக்க தயார் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக மத்தியில் யார் உதவி செய்வதாக இருந்தாலும் அந்த அரசுக்கு ஆதரவளிக்க ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தயாராக உள்ளது. பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமையவும், ஆதரவளிக்க தயாராக உள்ளேன்.

#TamilSchoolmychoice

ஆந்திராவின் நலனே எங்களுக்கு முக்கியம். அதற்கு யார் உதவினாலும் அவர்களை எதிர்க்க மாட்டோம். ஆந்திராவின் மறு சீரமைப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவும் அரசாக இருக்கவேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.