Home உலகம் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!

572
0
SHARE
Ad

14-south-west-airlines-11-2-60கலிபோர்னியா, ஏப்ரல் 15 – அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருந்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 5 சிப்பந்திகள் மற்றும் 134 பயணிகளுடன் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமன்டோ நகருக்கு கிளம்பியது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றார். இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஒமாஹா நகரில் தரையிறக்கப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்தபோது அதன் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கும் வரை அந்த பயணியை ஒரு மருத்துவரும், 2 பயணிகளும் சேர்ந்து எங்கும் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

பின்னர் அவரை இறக்கிவிட்டு விட்டு விமானம் சாக்ரமன்டோ நகருக்கு கிளம்பிச் சென்றது. இந்த சம்பவத்தால் விமானம் சாக்ரமன்டோவுக்கு இரண்டு மணிநேரம் தாமதமாக சென்றது.