Home இந்தியா மோடியின் வருகையால் தமிழகத்தில் எழுச்சி – பொன்.ராதாகிருஷ்ணன்!

மோடியின் வருகையால் தமிழகத்தில் எழுச்சி – பொன்.ராதாகிருஷ்ணன்!

555
0
SHARE
Ad

radaநாகர்கோவில், ஏப்ரல் 15 – தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

மோடியில் வருகையால் தமிழகத்தில் எழுச்சியும், உற்சாகமும் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார். அம்பேத்கரின் தியாகத்தை, ஏழை எளிய மக்களிடம் அவருக்கு இருந்த அன்பை மோடியின் பிரச்சாரம் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அம்பேத்கரின் எண்ணங்கள், கனவுகள் அடுத்து அமைய போகும் மோடி அரசால் நிறைவேற்றப்படும்.

#TamilSchoolmychoice

அடுத்த 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களின் வாழ்வு உயர நடவடிக்கை எடுக்கப்படும். பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் தமிழக வருகையால் இங்கு எழுச்சியும், உற்சாகமும் உருவாகியுள்ளது.

மோடியின் வருகை, அவரது பிரச்சாரம் காரணமாக தமிழகம் எதிர்காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.

மோடி, ரஜினியை சந்தித்ததும், ரஜினி மோடியுடன் பேசியதும், அவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது. ரஜினி மோடி மீது பற்றும், பாசமும் காட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.