Home நாடு MH370: மக்களை முட்டாளாக்க வேண்டாம் – அன்வாருக்கு நஜிப் பதிலடி!

MH370: மக்களை முட்டாளாக்க வேண்டாம் – அன்வாருக்கு நஜிப் பதிலடி!

404
0
SHARE
Ad

anwar-ibrahimபுத்ராஜெயா, ஏப்ரல் 15 – மாயமான மாஸ் MH370 விமானத்தை ஒரு நொடியில் கண்டுபிடித்து விடுவேன் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளதை நஜிப் துன் ரசாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து நஜிப் இன்று வெளியிட்ட அறிக்கையில், “எதிர்கட்சித் தலைவரின் இந்த கருத்து முறையற்றதாக மலேசிய மக்களை முட்டாளாக்கும் விதமாக உள்ளது. விமானம் காணாமல் போகி இதோடு 39 நாட்கள் ஆகிவிட்டன. அண்டை நாடுகளை உதவிக்கு அழைத்து தேடும் அளவிற்கு இந்த விவகாரம் கடும் சவாலாக உள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, சீன பத்திரிகை ஒன்று நேர்காணல் அளித்த அன்வார் இப்ராகிம், காணாமல் போன விமான விவகாரத்தை ஒரு நொடியில் தீர்த்து விடுவதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice