Home உலகம் எபோலா நோய் தாக்குதல் – கினியாவில் 121 பேர் மரணம்!

எபோலா நோய் தாக்குதல் – கினியாவில் 121 பேர் மரணம்!

443
0
SHARE
Ad

kinகினியா, ஏப்ரல் 18 – கினியா நாட்டில் எபோலா என்ற ரத்த சோகை நோய்க் காய்ச்சலுக்கு இதுவரை 121 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய கணக்கீடு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் முதன் முதலிலும், பின்னர் லைபீரியாவிலும் எபோலா என்ற ரத்த சோகை நோய்க்காய்ச்சல் கண்டறியப்பட்டது.

பொதுவாக மத்திய, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் இந்த நோய்த்தாக்கம் முதன்முறையாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியிருப்பது அங்குள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

முறையான சிகிச்சைகளோ, தடுப்பூசியோ இல்லாத இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க நோய் தாக்கியவர்களுடன் பழகும் வாய்ப்புள்ள அனைவரையும் சுகாதார ஊழியர்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

கினியாவில் இதுவரை 121 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய கணக்கீடு தெரிவித்துள்ளது. கினியாவின் அண்டை நாடான மாலியில் சந்தேகிக்கப்பட்ட பத்து வழக்குகளின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக அமெரிக்காவிற்கும், செனகலுக்கும் அனுப்பப்பட்டன.

ஆனால் அவை எதிர்மறையான முடிவுகளையே தெரிவித்துள்ளதாக மாலியின் சுகாதாரத்துறை அமைச்சர் அவுஸ்மனே கோன்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஐ.நாவின் சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ள சந்தேகத்திற்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட 200 எபோலா நோயாளிகளில் பெரும்பான்மையானோர் கினியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பரவியுள்ள இந்த நோயின் தாக்கம் குறைவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.