Home இந்தியா தங்கும்விடுதியில் தீ விபத்து – உயிர் தப்பினார் மம்தா பானர்ஜி!

தங்கும்விடுதியில் தீ விபத்து – உயிர் தப்பினார் மம்தா பானர்ஜி!

507
0
SHARE
Ad

mamthaமால்டா, ஏப்ரல் 18 – மால்டா மாவட்டத்தில் பிரச்சாரத்துக்கு சென்ற மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மால்டாவில் உள்ள ஓர் தங்கும்விடுதியின் முதல் மாடியில் உள்ள ஓர் அறையில் அவர் தங்கி இருந்தார்.

அவருடன் பிரச்சாரத்துக்கு சென்ற மாநில போக்குவரத்து மந்திரி மதன் மித்ரா, நடிகரும், டெல்லி மேல்–சபை எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 6.40 மணியளவில், மம்தா தங்கி இருந்த அறையில் உள்ள குளிர்சாதன பெட்டி திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அப்போது, மம்தா குளியலறையில் இருந்தார். தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அந்த அறை முழுவதும் புகை பரவியது.

#TamilSchoolmychoice

புகையை சுவாசித்ததால், மம்தாவுக்கு மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. உடனே அவர் தனது உதவியாளர் ஜோய்தீப் என்பவரை உதவிக்கு வருமாறு கூச்சலிட்டு அழைத்தார். இதனால் ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோய்தீப் அந்த அறைக்கு ஓடினார். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அவர், ஒரு போர்வையால் மம்தாவை போர்த்தியபடி, புகை மூட்டத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அதற்குள், மந்திரி மதன் மித்ரா, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் முதல் மாடிக்கு ஓடி வந்தனர்.

மருத்துவர்கள் வந்து மம்தாவின் உடல்நிலையை பரிசோதித்தனர். தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஆனால், மாநில மந்திரி மதன் மித்ராவோ, இதற்கு பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார். மம்தா பானர்ஜிக்கு தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவர் பத்திரமாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.