இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வரமாட்டார் எனவும், அவர் வர விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் வரும் 21-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக வருகிறார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. மோடி, சோனியா காந்தி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
தற்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வரும் 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) வருகிறார்.
தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சு.திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தியின் பயண திட்டம் குறித்தும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்தும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.