Home நாடு “நான் சிறைக்குச் செல்ல நேரிடலாம்” – அன்வார் இப்ராகிம்!

“நான் சிறைக்குச் செல்ல நேரிடலாம்” – அன்வார் இப்ராகிம்!

608
0
SHARE
Ad

anvaarபினாங்கு, ஏப்ரல் 19 – “தகாத உறவு வழக்கில் தாம் சிறைக்குப் போகலாம், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பறிபோகலாம்” என பினாங்கு செபராங் ஜெயாவில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆவேசமாகப் பேசினார்.

அன்வாருக்கு கடந்த மார்ச்சில் அப்பீல் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்த நிலையில், அன்வார் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்.

அவரின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் சிறை செல்ல நேரிடும். அன்வாரின் நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அன்வார் கூறியதாவது, “குதப்புணர்ச்சி வழக்கில் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தால் நான் சிறை செல்ல நேரிடும். ஆகையால் தாம் கலந்து கொள்ளும் நாடாளுமன்றக் கூட்டம் இதுவே இறுதியாக இருக்கலாம். எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் கூட்டணியை வெற்றி பெற செய்து அத்தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

மே 1ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து நடைபெறும் ஆட்சேப பேரணியில் மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.