Home நாடு இளமைக்கால நண்பரை இழந்து விட்டேன் – லிம் கிட் சியாங்

இளமைக்கால நண்பரை இழந்து விட்டேன் – லிம் கிட் சியாங்

558
0
SHARE
Ad

Karpalபினாங்கு, ஏப்ரல் 19 – “என் இளமைக்கால நண்பரை இழந்துவிட்டேன். கர்ப்பால் சிங்,என்னோடு பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தொண்டாற்றியவர். போராட்டக் காலங்களில் என்னோடு பக்கப் பலமாக இருந்தவர்” என கர்ப்பாலின் நீண்டகால அரசியல் சகாவான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

“நான் பட்ட துயரங்களை என்னோடு இருந்து அவரும் துன்பப்பட்ட அந்தத் தருணங்களை மறக்க முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இரண்டு ஆண்டுகள், எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவமாகும். ஜசெகவின் வளர்ச்சிக்கு கர்ப்பால் ஆற்றிருக்கும் சேவை மறக்க முடியாது. ஒரு மாபெரும் தலைவர், ஒரு நீதிமான் எல்லாவற்றையும் விட நல்ல மனிதர், சிறந்த பண்பாளர்” என்றும் கிட் சியாங் கூறினார்.

மேலும் அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும் என்று ஜசெக கட்சியின் ஆலோசகரும் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice