Home நாடு கர்ப்பால் நினைவுகள் # 1 : “தந்தையைப் போலவே கார் விபத்தில் காலமாகி விட்டாரே” –...

கர்ப்பால் நினைவுகள் # 1 : “தந்தையைப் போலவே கார் விபத்தில் காலமாகி விட்டாரே” – கர்ப்பாலின் மூத்த சகோதரர் வேதனை

598
0
SHARE
Ad

karpalபினாங்கு, ஏப்ரல் 20 – “எங்களின் தந்தையைப் போலவே கர்ப்பாலும் கார் விபத்தில் உயிரிழந்தது எங்களுக்குப் பழைய  நினைவுகளைக் கொண்டு வந்துள்ளது என்பதோடு, மிகுந்த வேதனையையும் அளிக்கின்றது” என மறைந்த கர்ப்பால் சிங்கின் மூத்த சகோதரர் பக்‌சிஸ் சிங்க் வேதனையுடன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

80 வயதான கர்ப்பாலின் மூத்த சகோதரர் பக்சிஸ், கர்ப்பாலின்   திடீர் மறைவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். கர்ப்பாலின் கார் விபத்து தங்களின் தந்தையின் வேதனையான நினைவுகளைக் கிளறி விடுவதாக அமைந்து விட்டதாகவும் பக்சிஸ் கூறினார்.

“எங்களின் தந்தை ராம் சிங் டியோ இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் ரிக்‌ஷா வண்டியில் செல்லும்போது கார் ஒன்றினால் மோதப்பட்டு மரணமடைந்தார்”  என்ற விவரத்தையும் பக்சிஸ் நினைவு கூர்ந்தார்.

இது கடவுளின் சித்தம் போலும் என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வைசாக்கி புத்தாண்டு பிரார்த்தனைகளை முன்னிட்டு நான் சீக்கிய ஆலயத்தில் அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் வழக்கம்போல் உற்சாகத்துடனும், நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொண்டும் வாய்விட்டு சிரித்துக் கொண்டும் இருந்தார்” என்பதையும் பக்சிஸ் நினைவு கூர்ந்தார்.

மறைந்த கர்ப்பாலுக்கு ஜக்டிப், கோபிந்த் சிங் டியோ, ராம் கர்ப்பால் சிங் டியோ, மான்கர்ப்பால் சிங் டியோ என்ற நான்கு புதல்வர்களும் சங்கீத் கோர் என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.

கர்ப்பாலின் மனைவி 66 வயதுடைய குர்மிட் கோர் ஆவார்.

(பின்குறிப்பு : மறைந்த கர்ப்பால் சிங், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரது மனங்களிலும் பல்வேறு காரணங்களால் இடம் பிடித்தவர். அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள விவரங்கள் ‘கர்ப்பால் நினைவுகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, அவருக்கு அஞ்சலியாக அடுத்த சில நாட்களுக்கு வெளிவரும்)