Home நாடு ஜெலுத்தோங்கின் ஐஜேஎம் புரொமனேட் இனி ‘கர்ப்பால் சிங் டிரைவ்’ என அழைக்கப்படும்!

ஜெலுத்தோங்கின் ஐஜேஎம் புரொமனேட் இனி ‘கர்ப்பால் சிங் டிரைவ்’ என அழைக்கப்படும்!

546
0
SHARE
Ad

ஜியோர்ஜ் டவுன், ஏப்ரல் 20 – பினாங்கில் லெபோ சுங்கை பினாங் சாலையில் உள்ள ஐஜேஎம் புரொமனேட் எனப்படும் இடம் இனி . கர்ப்பாலின் நினைவாக, ‘கர்ப்பால் சிங் டிரைவ்’ (Karpal Singh Drive) என அழைக்கப்படும் என பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

Karpal-300-x-200இந்த சாலை, பல்லாண்டுகள் கர்ப்பால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெலுத்தோங் தொகுதியின் கீழ் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

800 மீட்டர் நீளமுள்ள அந்த சாலைப் பகுதிக்கு கர்ப்பாலின் பெயர் சூட்டும் திட்டத்தை அடுத்த மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தான் முன்மொழிய இருப்பதாகவும் லிம் குவான் எங் கூறினார்.

கர்ப்பாலின் இறுதிச் சடங்குக்கு இடையில் இதனை அறிவித்த லிம், பின்னர் கர்ப்பால் சிங் டிரைவ் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஐஜேஎம் புரொமனேட் பகுதியின் வரைபடம் ஒன்றை, பெயர் சூட்டும் நிகழ்வின் அடையாளமாக, கர்ப்பாலின் ஜாலான் உத்தாமா இல்லத்தில்,  அவரது  மனைவி குர்மிட் கவுரிடம் லிம் குவான் எங் வழங்கினார்.

குர்மிட் கவுர் நன்றி

Gurmit Kaur Karpal 300 x 200கர்ப்பாலின் அகால மரணத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் இதுவரை எதுவும் பேசாமல் இருந்த அவரது மனைவி குர்மிட் கவுர் முதல் முறையாக பத்திரிக்கையாளர்களிடம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

“ஜெலுத்தோங்கின் புலி என அழைக்கப்பட்ட எனது கணவரின் சேவைக்காக, அவரது பெயரால் இந்த தொகுதியில் உள்ள ஒரு சாலைப் பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டதற்காக மாநில அரசாங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குர்மிட் கூறினார்.

“ஒரு பினாங்கு மாநிலத்துக்காரர் என்ற முறையில் கர்ப்பால் பினாங்கு மாநிலத்தின் நடவடிக்கைகளுக்காக நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்” என்றும் கூறிய குர்மிட் கவுர் தனது கணவருக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினர், நண்பர்கள், மலேசியாவிலும் உலகெங்கிலும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.