Home Uncategorized நரேந்திர மோடி ஒரு கொலைகாரர் – பென்னி பிரசாத் வர்மா!

நரேந்திர மோடி ஒரு கொலைகாரர் – பென்னி பிரசாத் வர்மா!

559
0
SHARE
Ad

prasathபுதுடெல்லி, ஏப்ரல் 21 – நரேந்திர மோடி ஒரு கொலைகாரர் என காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான பென்னி பிரசாத் வர்மா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து லக்னோவில் அவர் பேசுகையில், மோடி தனது 18-வது வயதிலேயே கொலை செய்துவிட்டு வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டதாக கூறினார்.

இந்நிலையில், பென்னியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் கீழ்த்தரமாக போய்விட்டதை வர்மாவின் குற்றச்சாட்டுகள் காட்டுவதாகவும், ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் இவ்வாறு திரும்ப திரும்ப குற்றங்களை செய்து வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பென்னியின் குற்றச்சாட்டுக்கள் கேவலமானதும், அடிப்படை ஆதாரமற்றதும் ஆகும். பென்னி தனது பேச்சில் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

காங்கிரசின் அடித்தளம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க அவர்களது பலவீனமும், விரக்தியும் அதிகரித்து வருகிறது” என்றார்.

ஏற்கனவே, நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ்-ன் மிகப்பெரிய ரவுடி என்று அழைத்ததற்காக பென்னி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.