Home உலகம் சவுதி அரேபியாவில் உருவாகும் உலகின் மிக உயரமான கட்டடம்!

சவுதி அரேபியாவில் உருவாகும் உலகின் மிக உயரமான கட்டடம்!

851
0
SHARE
Ad

wundeபுர்ஜ் கலீபா, ஏப்ரல் 21 – துபாய் நாட்டில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடம் உலகில் மிக உயர்ந்த கட்டடமாகும்.  இது 828 மீட்டர்கள் உயரம் கொண்டது.  தற்பொழுது, இதனை அடுத்த இடத்திற்கு தள்ளும் விதமாக சவுதி அரேபியா நாட்டில் மற்றொரு கட்டடம் எழுப்பப்படுகிறது.

கிங்டம் டவர் என்ற பெயரில் எழுப்பப்படும் இந்த கட்டடம் 1,000 மீட்டர்கள் உயரத்தில் உருவாகிறது. அதாவது 3,280 அடி உயரம் கொண்டிருக்கும்.  புர்ஜ் கலீபா டவரை விட 568 அடி உயரே அமையும் கிங்டம் டவர் கட்டடத்தின் தொடக்க கட்டுமான பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கின.

தரைக்கு மேலே கட்டடம் எழுப்புவது தொடர்பான பணிகள் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கும்.  இந்த கட்டிடம் 63 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஒரு கிலோமீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த கட்டிடம் ஒரு ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள், ஆடம்பர விடுதிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இந்த கட்டிடத்தில் 200 தளங்கள் இருக்கும்.  அவற்றில் 160 தளங்கள் பொது பயன்பாட்டில் இருக்கும்.  இந்த கிங்டம் டவர் ஆனது கிங்டம் சிட்டியின் ஒரு கட்ட பணியாகும்.

செங்கடல் துறைமுக நகரத்தின் வடக்கே கட்டப்படும் இந்த கிங்டம் சிட்டியானது 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகிறது.