Home India Elections 2014 பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் – சரத்குமார்

பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் – சரத்குமார்

653
0
SHARE
Ad

sarathkumarதிருவள்ளூர், ஏப்ரல் 22 –  பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை ஆதரித்து திருவள்ளூர் வீதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மத்தியிலே 10 ஆண்டு காலம் ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். 9 ஆண்டு காலம் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தி.மு.க.வினர் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கு நீங்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

#TamilSchoolmychoice

முதல்வர்  ஜெயலலிதா தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல சீரிய திட்டங்களை தீட்டி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர்  ஜெயலலிதா தான்.

தே.மு.தி.க. தலைவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைத்தது ஜெயலலிதாவால் தான். அதனை அவர் பயன்படுத்தினாரா? கூட்டணி தர்மத்தை அவர் கடைபிடித்தாரா? இல்லை.

அவருக்கு தேவை பதவி. பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார். மத்தியில் நிலையான, ஊழலற்ற ஆட்சி அமைய அ.தி.மு.க. அரசுக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என சரத்குமார் பேசினார்.