Home உலகம் தென்கொரிய கப்பல் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

தென்கொரிய கப்பல் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

542
0
SHARE
Ad

shipஜிண்டோ, ஏப்ரல் 22 – தென்கொரியா இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 477 பயணிகளுடன் சென்ற செவோல் என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.  நேற்று இரவு நடந்த மீட்புப் பணியின் போது கப்பலுக்குள் இருந்து மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 194 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது.