Home இந்தியா தேர்தல் முடிவுகள் தனது ஆட்சி நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் – நிதிஷ் குமார் ஒப்புதல்

தேர்தல் முடிவுகள் தனது ஆட்சி நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் – நிதிஷ் குமார் ஒப்புதல்

517
0
SHARE
Ad

nethishபாட்னா, ஏப்ரல் 23 – நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், தேர்தல் முடிவுகள் தனது ஆட்சி நீடிக்குமா என்பதை திர்மானிப்பதாக அமையும் என்று தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் தேர்தலுக்கு பின் காங்கிரசுடனோ, பா.ஜ.க.வுடனோ கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று நிதிஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த அக்கட்சி தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ.க உடனான தனது உறவை முறித்து கொண்டது.

இது அக்கட்சி பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக பா.ஜ.க.வுக்கு செல்வது அக்கட்சியின் ஆட்சியை அசைத்துப்பார்க்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.