Home தொழில் நுட்பம் லெனோவோவின் 3ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

லெனோவோவின் 3ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

500
0
SHARE
Ad

Lenovo-Sடெல்லி, ஏப்ரல் 23 – சீன செல்போன் நிறுவனமான லெனோவோ புதிய 3ஜி ஸ்மார்ட்ஃபோன் எஸ்-660 மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச செல்பேசி மாநாட்டில் அறிமுகமான எஸ்-660 மாடல் ஸ்மார்ட் ஃபோனை இந்நிறுவனம் சந்தைக்கு கொண்டுவந்துள்ளது. ஆன்ட்ராய்ட் திறனில் செயல்படும் இந்த செல்பேசி, 4.7 அங்குல திரை கொண்டது.

லெனோவின் தனித்துவமான டூயிட் ஆப்ஸ் பொருத்தியது. இந்த இரட்டை சிம் கார்டு பயன்பாடுள்ள செல்பேசியில் 8எம்.பி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் நினைவுத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபியாக அதிகரிக்கலாம். இதன் விலை வெள்ளி 650 ஆகும்.