Home India Elections 2014 மக்களை தவறாக வழிநடத்துகிறார் மோடி – சோனியா காந்தி

மக்களை தவறாக வழிநடத்துகிறார் மோடி – சோனியா காந்தி

570
0
SHARE
Ad

soniaகொல்கத்தா, ஏப்ரல் 23 – காங்கிரசுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் பாஜகவின் முக்கிய செயல் திட்டமாக அமைந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம், இஸ்லாம்பூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அங்கே அவர், ராய்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தீபா தாஸ்முன்ஷியை ஆதரித்து பேசும்போது, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடுமையாக தாக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, காங்கிரசுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் சில கட்சிகளின் முக்கிய செயல் திட்டமாக அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பாக மக்களை தவறாக வழிநடத்துவதில் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திரமோடி எல்லா எல்லைகளையும் கடந்து விட்டார். பிரதமர் நாற்காலியில் அமர்வதற்காக மோடி ஒட்டுமொத்த தேசத்தையுமே பித்து பிடிக்க வைத்து வருகிறார்.

மக்களை தவறாக வழிநடத்துகிறார். பிரதமர் நாற்காலியைப் பிடிப்பதற்காக அவர்கள் பொய்களை அவிழ்த்து விடும் மிகப்பெரிய வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.

இத்தகையவர்களின் கைகளில் இந்த தேசம் பாதுகாப்பாக இருக்குமா என்பது கவலை அளிக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது என சோனியா காந்தி கூறினார்.