Home உலகம் மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு ஒபாமா சுற்று பயணம்!

மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு ஒபாமா சுற்று பயணம்!

433
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், ஏப்ரல் 24 – நான்கு நாடுகள் அடங்கிய ஆசிய சுற்றுப்பயணத் திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று தொடங்கினார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு பணிநிறுத்தத்தினால், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ரத்தான ஒபாமாவின் ஆசிய பயணம் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்தப் பயணத்தில் வரும் 29-ஆம் தேதி வரை ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கும் அவர் வருகைத் தருகின்றார்.

#TamilSchoolmychoice

ஆசிய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார உறவு பற்றி இந்தப் பயணத்தில் கவனம் செலுத்தப்படும் என்று வெள்ளை மாளிகைத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும் அதிகரித்துவரும் சீனாவின் சக்திவாய்ந்த முன்னிலை உட்பட பிராந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று கருதப்படுகின்றது.

போட்டி மனப்பான்மையில் மத்தியில் ஆசிய நாடுகளும், அமெரிக்கா தங்களின் மீது கவனம் செலுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒபாமாவின் இந்த ஆசிய பயணம் தொடர்பாக முன்னாள் துணை செயலாளரான பி.ஜே.கிரௌலி கூறுகையில், “ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா வைத்துள்ள முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும், தலைவர்கள் அளவிலான உறவுகளை மீண்டும் நிலைநிறுத்தவும் இந்தப் பயணம் வாய்ப்பினை அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயுடனான தனிப்பட்ட இரவு விருந்து மற்றும் தென் கொரிய, மலேசிய, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைவர்களுடனான இருதரப்பு கூட்டங்கள் போன்றவையும் இந்த பயணத்தில் அடங்கும்.

அமெரிக்காவுடனான அனைத்து நாடுகளின் தொடர்புகளையும் சமன்படுத்துவது மட்டுமின்றி, ஆசிய நாடுகளுக்கு இடையே குறிப்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் உறவுகளை மேம்படுத்த ஒபாமா முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.