Home கலை உலகம் கமலஹாசனின் ‘உத்தம வில்லன்’ செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது!

கமலஹாசனின் ‘உத்தம வில்லன்’ செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது!

605
0
SHARE
Ad

kamallசென்னை, ஏப்ரல் 24 – ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார்.

#TamilSchoolmychoice

இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் கமலுக்கு பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. கமல்ஹாசன்  இன்று வாக்களித்துவிட்டு நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.

இதையடுத்து இன்று ‘உத்தம வில்லன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் ‘உத்தம வில்லன்’ செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.