Home தொழில் நுட்பம் ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 7.1.1 வெளியீடு!

ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 7.1.1 வெளியீடு!

499
0
SHARE
Ad

13.06.15-iOS7_Animation

ஏப்ரல் 25 –  ஆப்பிள் தனது ஐஒஎஸ் 7.1.1 இயங்குதளத்தில் இருந்த சில குறைபாடுகளை அகற்றி கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் விசைப்பலகையின் செயல்பாடுகள் மற்றும் ஐபோன் 5S – ல் உள்ள ‘டச் ஐடி பிங்கர் பிரிண்ட் சென்சார்’ (Touch Id Finger Print Sensor)  ஆகியவை சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

#TamilSchoolmychoice

 இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 7.1.1 – ஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஐபோன் 5S பயனர்கள் டச் ஐடி பிங்கர் பிரிண்ட் சென்சாரில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணரலாம். அதேவேளையில் வாய்ஸ் ஓவர், செயல்பாட்டில் உள்ள போது,  ‘ப்ளு டூத்’ (Blue Tooth) மூலம் இயங்கும் விசைப்பலகையின் குறைபாடுகளும் நீக்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 7.1.1 – ஐ ஐபோன்  அல்லது ஐபேட் பயனர்கள் தங்கள் திறன்பேசிகளில் உள்ள செட்டிங் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதி தொடங்க உள்ள அனைத்துலக உற்பத்தியாளர்கள் கருத்தரங்கில் ஆப்பிள் தனது 8-ஆம் தலைமுறை இயங்குதளமான ஐஒஎஸ் 8 – ஐ அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.