Home கலை உலகம் சாவகாசமாக மாலையில் வாக்களித்த ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய்!

சாவகாசமாக மாலையில் வாக்களித்த ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய்!

656
0
SHARE
Ad

sharukkaanசென்னை, ஏப்ரல் 25 – பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மாலை வேளையில் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திரை உலக பிரபலங்கள் காலை முதலே வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஆளாக சென்று காலை 7 மணிக்கே வாக்களித்துவிட்டார்.

அதன் பிறகு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் என்று பிரபலங்கள் வரிசையாக வாக்களித்தனர். நடிகர் சிம்பு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மாலை வேளையில் சென்று வாக்களித்தார்.

#TamilSchoolmychoice

இதே போன்று பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் 5 மணிக்கு மேல் சென்று வாக்களித்தனர். கமல் ஹாஸன் வாக்களிப்பதற்காக ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு வந்து வாக்களித்தார்.