Home இந்தியா ராஜா, கனிமொழி, தயாளம்மாள் உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – அமலாக்க...

ராஜா, கனிமொழி, தயாளம்மாள் உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – அமலாக்க பிரிவு அதிரடி

759
0
SHARE
Ad

Rajaபுதுடில்லி, ஏப்ரல் 26 – ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளம்மாள் உள்ளிட்ட, 19 பேர் மீது, அமலாக்க பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் ஏற்கனவே, ராஜா மற்றும் கனிமொழி மீது, சி.பி.ஐ., தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்க இயக்குநரகம் சார்பிலும் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தி.மு.க. தலைமைக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படாததால், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., இந்த முறைகேட்டில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தது. குறைந்த விலையில், சில தனியார் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்க, ஏராளமான கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக, சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.

இதில், ‘கலைஞர் தொலைக்காட்சிக்கு, 200 கோடி ரூபாய் (வெள்ளி 10,52,500,00) பல நிறுவனங்கள் வழியாக கைமாறியதாக கூறப்பட்டது. இதையடுத்து, கலைஞர் தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி, அதன் நிர்வாக இயக்குநர், சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா ஆகியோர் மீது, சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.raj

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக, மீண்டும் களம் இறங்கியுள்ளார் ராஜா. இந்த வழக்கு விசாரணை, ஒருபுறம் நடக்கும் நிலையில், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் பண மோசடி நடந்துள்ளதாக, மத்திய நிதித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய அமலாக்க இயக்குநரகம், இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

விசாரணைக்கு பின், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி, ராஜா மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேர் மீது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ‘கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குகள், தயாளுவின் பெயரிலும், கனிமொழி மற்றும் சரத்குமார் பெயரில் தலா, 20 சதவீத பங்குகளும் உள்ளன.

இந்நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், ‘கலைஞர் டிவி’க்கு, 200 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.