Home உலகம் MH370: பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் கடும் ஆர்பாட்டம்!

MH370: பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் கடும் ஆர்பாட்டம்!

488
0
SHARE
Ad

mh370-protest2பெய்ஜிங், ஏப்ரல் 26 – 239 பயணிகளுடன் மாயமான மாஸ் MH370 விமானம் பற்றிய குழப்பங்களும், மர்மங்களும் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை நம்பத் தகுந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்த 153 சீனப் பயணிகளின் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென அங்குள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் மலேசியத் தூதரகத்தின் முன் இரவு முழுவதும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடங்கி, அந்தப் பகுதிக்கான போக்குவரத்தைத் தடை செய்தனர். அந்தப் பகுதியில் இந்திய, அமெரிக்கத் தூதரகங்கள் இருப்பதனால் பாதுகாப்புக் காரணம் கருதி நேற்று அவை மூடப்பட்டன.

காணாமல் போன விமானத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களைத் தெரிவிக்கும்படி மக்கள், மலேசியத் தூதரகத்தை முற்றுகையிடுவது இது இரண்டாவது முறையாகும். மலேசியன் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டபோது குறிப்பிட்டபடி தூதரக அதிகாரிகள் அங்கு காணப்படவில்லை என்பதே இவர்களின் கோபத்திற்குக் காரணமாகக் கூறப்பட்டது. இதற்கு முன்னர் பிரதமர் நஜிப் துன் ரசாக், விமானம் இறுதியாக தெற்கு இந்தியப் பெருங்கடலில் முடிந்ததாக அறிவித்தபோதும், அவர்கள் மலேசிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

#TamilSchoolmychoice

இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் சீன அதிகாரிகள் அனுமதி அளிப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.