Home நாடு “எம்எச் 370 : விமானம் பற்றிய புலானாய்வு அறிக்கை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும்” – நஜிப்

“எம்எச் 370 : விமானம் பற்றிய புலானாய்வு அறிக்கை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும்” – நஜிப்

596
0
SHARE
Ad

Najib-300-x-200கோலாலம்பூர், ஏப்ரல் 26 -காணாமல் போன மாஸ் விமானம் பற்றிய மலேசிய அரசாங்கத்தின் புலனாய்வு அறிக்கை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நஜிப் இந்த தகவலைத் தெரிவித்தார்.

“இது தொடர்பாக எழுந்துள்ள அறைகூவல்கள் எனக்கும் கேட்கின்றன. எனவே, நான் காணாமல் போன விமானம் பற்றி புலனாய்வு செய்து வரும் குழுவிடம் அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்” என நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆனால், அந்த விமானம் காணாமல் போய்விட்டது என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று கூறிய நஜிப் அந்த விமானத்திலிருந்த 239 பயணிகளும் மரணமடைந்து விட்டனர் என்றும் தாங்கள் அறிவிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

பயணிகளின் உறவினர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக நஜிப் கூறினார்.

தொடக்கக் கட்டத்தில் இந்த விவகாரத்தை கையாள்வதில் மலேசியா பின்னடைவுகளை சந்தித்தாலும் தற்போது எல்லா நிலையிலான புலனாய்வுகளும் தேடுதல்களும் முறையாக நடைபெற்று வருவதாக நஜிப் கூறினார்.

தற்போது காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி 50 நாளைக் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.