Home வாழ் நலம் ஆரோக்கியம் தரும் தர்பூசணி!

ஆரோக்கியம் தரும் தர்பூசணி!

1199
0
SHARE
Ad

watermelanஏப்ரல் 28 – தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது.

தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ள முடியும். ஆஸ்துமா, வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் வாதம் போன்ற நோயை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக்ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது.

#TamilSchoolmychoice

இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
Watermelon-Red
1 தர்பூசணி பழத்தில் உள்ள சத்துகள்:

வைட்டமின் சி 16.4% 
பேண்டோதெனிக் அமிலம் 6.8% 
தாமிரம் 6.6%
பயோட்டின் 5%
பொட்டாசியம் 4.8% 
வைட்டமின் ஏ 4.8%
வைட்டமின் பி 14.1% 
உயிர்ச்சத்து பி 64.1%
மெக்னீசியம் 3.8% 

தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போ ஹைட்ரேட் மற்றும் பைர் ஆகியவை உள்ளது. உடல் நலத்திற்கு ஊட்டசத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போ ஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.Watermelons

கொழுப்பை குறைக்கும்:  கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யின் உதவியுடன் செயல்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும்.

மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. நம் ஊரில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

இதய பாதுகாப்பு:  தர்பூசணி ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜினைனான’ எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது.

அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம்.