Home நாடு இளைய வணிகர்களுக்கு உதவுவோம் – ஒபாமா அறிவிப்பு

இளைய வணிகர்களுக்கு உதவுவோம் – ஒபாமா அறிவிப்பு

586
0
SHARE
Ad

Obama young entrepreneurs 600 x 300கோலாலம்பூர், ஏப்ரல் 29 – தனது மலேசிய வருகையின் போது கடந்த  ஞாயிற்றுக்கிழமை சைபர் ஜெயாவில் இளைய சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர்களுக்கு உதவும் மையம் ஒன்றை ஒபாமா பிரதமர் நஜிப்புடன் இணைந்து தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

சைபர் ஜெயாவில் அமைந்துள்ள மலேசிய அனைத்துலக புத்தாக்க மற்றும் படைப்பாக்க மையம் என்ற இந்த அமைப்பின் தலைமையகத்தையும் ஒபாமா திறந்து வைத்தார்.

இந்த மையம் 2014ஆம் ஆண்டுக்கான மலேசிய வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் நிதியில் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் இளைஞர்கள் தங்களின் வணிகங்களை தொடக்கவும் விரிவாக்கம் செய்யவும் முடியும்.

உலகெங்கிலும் உள்ள இளைய சமுதாய வணிகர்கள் தங்களின் வர்த்தகங்களை தொடக்குவதற்கும் விரிவாக்குவதற்கும் நாங்கள் உதவி வருகிறோம். இதன்மூலம் அவர்களின் கனவு திட்டங்களை நாம் நனவாக்க முடியும். அதேசமயத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்என ஒபாமா கூறினார்.

இந்த மையத்திற்கு ஒபாமா வருகை தந்ததை எப்போதும் நினைவுபடுத்தும் வண்ணம் இந்த மையத்தின் தலைமையகத்திற்கு முன்னால் இருக்கும் திடல் பகுதி ஒபாமா வட்டம் என அழைக்கப்படும் என்று நஜிப் அறிவித்தார்.

நஜிப்பின் அறிவிப்பிற்கு பதிலளித்த ஒபாமா “இந்த அறிவிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என பலத்த கைதட்டலுக்கு இடையில் கூறினார்.