Home இந்தியா இந்திய பிரதமர் அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து!

இந்திய பிரதமர் அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து!

592
0
SHARE
Ad

PMOபுது டெல்லி, ஏப்ரல் 30 – புது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் கீழ்தளத்தில் திடீர் புகை எழுந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 7 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

கணினியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

மேலும் இந்த தீ விபத்தில், எந்த ஆணவங்களும் சேதமாகவில்லை என்றும் பிரதமர் அலுவலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.