Home அவசியம் படிக்க வேண்டியவை தானியங்கிக் கார்கள் தயாரிப்பில் கூகுள் மும்முரம்!

தானியங்கிக் கார்கள் தயாரிப்பில் கூகுள் மும்முரம்!

536
0
SHARE
Ad

google carஏப்ரல் 30 – உலகளாவிய அளவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010–ம் ஆண்டு முதல் ரோபோட்டிக் தொழில்நுட்பத் துறையிலும் தடம் பதித்து வருகிறது. அதன் முன்னோட்டமாக தானியங்கிக் கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தொழில் நுட்பத்தை பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கிக் கார்களை உருவாக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனங்கள், கார் தயாரிப்புத் தொழில் நுட்ப ரகசியங்களை கூகுளுக்கு தர விரும்பாததால் முன்னணி நிறுவனங்கள் அதனுடன் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

இந்நிலையில், கூகுள் சுயமாகக் கார் உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த தானியங்கிக் கார்கள் ஓட்டுனரின் உதவியின்றி தாமாகவே இயங்கும் தன்மை கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஓட்டுனர் ஒருவரும் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த தானியங்கிக் கார்கள் குறித்து அதன் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் கூறுகையில், “வெகு விரைவில், மனிதர்களின் தலையீடே இல்லாமல், முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கச் செய்யும் சாதனையை எட்டி விடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த தானியங்கிக் கார்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் கார்கள் இயக்கம் பற்றி கீழ்காணும் காணொளி வழி காணலாம்.

https://www.youtube.com/watch?v=csvt6JBAwBk