Home இந்தியா ஐபிஎல் 7: ஹைதராபாத் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது!

ஐபிஎல் 7: ஹைதராபாத் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது!

502
0
SHARE
Ad

ipllதுபாய், மே 1 – ஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. 173 ரன்கள் இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

இதையடுத்து துபையில் நடைபெற்ற 5 லீக் ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் இந்தியா திரும்புகிறது மும்பை. துபையில் 20 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளதால் ஐபிஎல் அணிகள் இந்தியாவுக்கு திரும்புகின்றன. இன்று மே தின தொழிலாளர்கள் ஓய்வு நாளாகும்.

#TamilSchoolmychoice

நாளை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் லீக் ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. நாளை ராஞ்சியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.