Home கலை உலகம் இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடைக்கு மாறிய தமன்னா!

இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடைக்கு மாறிய தமன்னா!

780
0
SHARE
Ad

thamanaசென்னை, மே 2 – இலியானாவின் போட்டியை சமாளிக்கும் விதமாக முதல் முறையாக நீச்சல் உடையில் தமன்னா போஸ் கொடுத்த படங்கள் இனையத்தளத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது.

நீச்சல் உடை அணியமாட்டேன், முத்தம் தந்து நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார் தமன்னா. தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வரும் தமன்னா அங்குள்ள கடும்போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

கவர்ச்சியில் கலக்கினால்தான் வாய்ப்பு குவியும் என்று சிலர் அறிவுரை செய்தனர். இந்நிலையில் இலியானா “து மேரா ஹீரோ” என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

#TamilSchoolmychoice

இது தமன்னாவுக்கு அதிர்ச்சி தந்தது. இந்நிலையில் சாஜித் கான் இயக்கத்தில் “ஹம்ஷக்கல்ஸ்” என்ற படத்தில் தமன்னா நடிக்கிறார்.
இதில் நீச்சல் உடை அணிந்து ரசிகர்களை தமன்னா குஷிபடுத்த உள்ளதாக பாலிவுட் பத்திரிகைகள் பரபரப்பாக தகவல் வெளியிட்டன.

இதைப் பார்த்து அதிர்ச்சியான தமன்னா, நீச்சல் உடையா அப்படியெல்லாம் நான் நடிக்கவில்லை என்று மறுத்தார். அவர் பொய் சொன்னது, தற்போது அம்பலமாகிவிட்டது. சமீபத்தில் ஹம்ஷக்கல்ஸ் பட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இதில் கண்ணைக் கவரும் விதவிதமான கலரில் நீச்சல் உடை  அணிந்து கடற்கரையில் தமன்னா நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் நடித்து வரும் டோலிவுட் படங்களிலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க கேட்டு இயக்குனர்கள் அவரை வற்புறுத்த தொடங்கி உள்ளனர். இதற்காக கூடுதலாக பல லட்சங்கள் தரவும் தயார் என்று தெரிவித்திருக்கிறார்களாம்.