ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டு நீண்ட நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
17 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் 149 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களே எடுக்க முடிந்தது.