வாஷிங்டன், மே 5 – சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழனின் கானிமெடே சந்திரனைப் பற்றி நாசாவின் கலிலியோ விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய சந்திரனான கானிமெடே 5300 கி.மீ குறுக்களவு கொண்டது.
சமீபத்தில் அந்த விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில், கானிமெடே சந்திரன், முழுவதும் கடும் பனிக்கட்டிகள் நிறைந்த பல அடுக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 1990–ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அதன் பரப்பு முழுவதும், கடலால் சூழப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், “கடும் உப்புத்தன்மை வாய்ந்த நீரில், மெக்னீசியம் சல்பேட் உலோகம் அதிகம் காணப்படுகிறது” என்று கூறியுள்ளது.