Home நாடு மீண்டும் அமைச்சரவையில் மசீச! மஇகா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

மீண்டும் அமைச்சரவையில் மசீச! மஇகா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

608
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 5 – பதவிகளைப் பெறுவதற்காக அமைச்சரவையில் மீண்டும் சேரவில்லை என்றும் நாட்டிற்க்கும் சீன சமூகத்திற்கும் சேவையாற்றவே அமைச்சரவையில் மீண்டும் சேர மலேசிய சீனர் சங்கம் (மசீச) முடிவெடுத்துள்ளது என்றும் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் (படம்) அறிவித்துள்ளார்.Liow-Tiong-Lai-Slider

“சீன சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக அரசாங்க வளங்கள் தேவைப்படுகிறது. அதே வேளையில் மேலும் பல மாநிலங்களில் மசீச ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேரவிருக்கிறார்கள். ஆனால், மசீச எந்த அமைச்சரவை பொறுப்புகளை ஏற்கும் என்ற கேள்வி குறித்துசெய்தியாளர்களிடம் விவாதிக்க மாட்டேன்” என்றும் லியாவ் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அமைச்சரவையில் மசீச சேரும் முடிவை பிரதமர் நஜிப்பும் வரவேற்றுள்ளார்.

தேசிய முன்னணியின் வலுவான வளர்ச்சிக்கும் நாட்டின் எதிர்காலத்தைஒன்றாக உறுதிப்படுத்ததுவதற்கும் மசீச அமைச்சரவையில் மீண்டும் சேர வேண்டும்என்று பிரதமர் நஜிப் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னால் தலைநகர் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நஜிப், அமைச்சரவையில் சேரும் மசீசவின் முடிவை வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் மசீசவின் வருகையினால் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கர்ப்பால் சிங்கின் மரணத்தால், மே 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் மசீச போட்டியிடவிருப்பதால், அந்தக் கட்சியை பலப்படுத்தும் வண்ணம் அதற்கு முன்பாகவே, மசீசவின் அமைச்சரவை நுழைவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ம.இ.கா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

மசீச எப்போதும் சுகாதார அமைச்சர் பதவியை வகித்து வந்திருக்கின்றது.

Dr S. Subramaniamகடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மோசமான முறையில் தோல்வியைத் தழுவிய காரணத்தால் அமைச்சரவையில் பங்கெடுக்கப் போவதில்லை என்ற முடிவை அந்த கட்சி எடுத்ததைத் தொடர்ந்து, இரண்டு அமைச்சர்களைக் கொண்ட ம.இ.காவுக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஒரு மருத்துவரான மஇகா தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் தற்போது சுகாதார அமைச்சராக சிறப்பான முறையில் சேவையாற்றி வருகின்றார்.

இதனால், அப்படியே மசீச அமைச்சரவைக்குள் வந்தாலும் சுகாதார அமைச்சர் பதவி மீண்டும் டாகடர் சுப்ரமணியத்திற்கே வழங்கப்படும் என்றும் ஆரூடங்கள் நிலவுகின்றன.

ஒரு மருத்துவராக இருக்கின்ற காரணத்தால் சுகாதார அமைச்சின் பிரச்சனைகளை அவரால் மிக எளிதாகப் புரிந்து கொண்டு செயலாற்ற முடிகின்றது என்பதாலும், அவரது பணிகளின் பிரதமர் மன நிறைவு கொண்டுள்ளதாலும் டாக்டர் சுப்ரமணியம் தொடர்ந்து சுகாதார அமைச்சராக நீடிப்பார் என்ற கருத்து தேசிய முன்னணி வட்டாரங்களில் நிலவுகின்றது.

பழனிவேல் மீண்டும் பிரதமர் துறை அமைச்சரா?

palanivel-1அதே வேளையில், தற்போது சுற்றுச் சூழல் அமைச்சராக இருக்கின்ற, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மீண்டும் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

அவரது அமைச்சுப் பதவி மசீசவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் துறையில் இந்தியர் விவகாரங்களுக்கான பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால், அவற்றை கண்காணிப்பதற்கும், தீவிரமாக செயல்படுத்துவதற்கும் பழனிவேல் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம்.

இதன் மூலம் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கின்ற அவர் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் செம்மையாக மேற்கொள்ள முடியும் என்பதாலும் அவர் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியாக இருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சுக்கு மசீச தலைவர்களில் ஒருவர் நியமிக்கப்படுவது மட்டும் உறுதி.

மசீசவின் தீர்மானங்கள்…

நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலில் மசீச படுதோல்வி கண்டால் அமைச்சரவையில் அது பங்கெடுக்காது என்று 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மசீச பொதுப் பேரவையில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் சுவா சொய் லெக் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

எனினும் லியாவ் தியோங் லாய் அக்கட்சியின் தேசியத் தலைவராக வாகை சூடியதும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் சிறப்புக் கூட்டத்தில் அந்தத் தீர்மானம் மீட்டுக் கொள்ளப்பட்டு, தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு மசீச புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது.

கடந்த பொதுத்தேர்தலில் படுமோசமான தோல்வியை மசீச கண்டது.

போட்டியிட்ட 37 நாடாளுமன்றத் தொதிகளில் ஏழு தொகுதிகளை மட்டும் வென்ற மசீச போட்டியிட்ட 90 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளை மட்டுமே வென்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.