Home உலகம் சிங்கப்பூர் அனைவருக்கும் பொதுவான நாடு: பிரதமர் லீ சியான் லூங்

சிங்கப்பூர் அனைவருக்கும் பொதுவான நாடு: பிரதமர் லீ சியான் லூங்

595
0
SHARE
Ad

indian-new-year-pm-leeசிங்கப்பூர், மே 6 – சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பொதுவான நாடாக சிங்கப்பூர் திகழ்கின்றது என அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறியுள்ளார்.

ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்ற அவர் கூறியதாவது:-
“சிங்கப்பூரில் உள்ளவர்கள், புதிதாக இங்கு வந்து பின்னர் நிரந்தரமாக குடியேறியவர்கள், வேலைக்காக வந்திருப்பவர்கள் என அனைவரும் சிங்கப்பூரில் ஒரு குடும்பமாக உள்ளோம். எனவே இது அனைவருக்கும் பொதுவான, சிறப்பான இடம் என்று கருதுகிறோம். அனைவரது கொண்டாட்டங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் எல்லோரும் கொண்டாடுகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்து சிங்கப்பூர் வந்தவர்களிடையே அந்நாட்டினர் பாரபட்சம் காட்டி வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வளமைக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வருகை முக்கியக் காரணம் என்று லூங்கின் அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.