Home நாடு செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

705
0
SHARE
Ad

Teresa-Kok-300x199கோலாலம்பூர், மே 6 – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் ஜாலான் டூத்தா உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

#TamilSchoolmychoice

சீனப் பெருநாளின் போது அவர் வெளியிட்ட காணொளியில் (வீடியோ) இருந்த உள்ளடக்கங்கள் சட்டவிதிகளுக்கு புறம்பானவை என்ற அடிப்படையில் அவர் குற்றம் சாட்டப்படுவார் என கோலாலம்பூர் துணை குற்றப் புலனாய்வு விசாரணை இயக்குநர் ஏசிபி கைரி அஹ்ராசா உறுதிப்படுத்தினார்.

தொடர்பு மற்றும் பல்ஊடக சட்டத்தின் 233 (1) (a) விதிகளின் படியும் குற்றவியல் சட்டம் விதி 505(B)இன் படியும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு காவல் துறை இந்த முடிவுக்கு வந்ததாகவும் கைரி அஹ்ராசா தெரிவித்துள்ளார்.

திரேசா கோக் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவாரா என்பது பற்றி அஹ்ராசா தெரிவிக்கவில்லை.

திரேசாவின் 11 நிமிட காணொளி கடந்த ஜனவரி 27ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் அவர் சீனப் பெருநாள் குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஃபெங் சுயி எனப்படும் சீன ஜாதக அடிப்படையில் எதிர்காலப் பலன்களைக் கூறுமாறு மூன்று பேரைக் கேட்க அவர்களும் பல மலேசிய விவகாரங்களைப் பற்றி கிண்டலாக பதில் கூறுகின்றார்கள் என்ற விதத்தில் அந்த காணொளி அமைக்கப்பட்டிருந்தது.

அந்த காணொளி குறித்து பல மலேசிய முஸ்லீம் அமைப்புகள் திரேசாவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

அந்த காணொளி இனங்களுக்கிடையிலான வெறுப்பைத் தூண்டி விடுகின்றது என பல தரப்புகள் திரேசாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்த குழுக்கள் திரேசாவின் அலுவலகம் முன்னால் இறந்த கோழிகளை போட்டு வைத்தனர் என்பதும், திரேசாவை யாராவது அறைந்தால் அவருக்கு 1,500 ரிங்கிட் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறைகூவல் விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.