Home கலை உலகம் டுவிட்டரில் இணைந்துள்ளார் ரஜினி!

டுவிட்டரில் இணைந்துள்ளார் ரஜினி!

583
0
SHARE
Ad

RAJINI2சென்னை, மே 6 – சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உலக அளவில் பிரபலமானவர்கள் உள்பட சாமானிய மக்கள் வரை டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது கருத்துகள் மற்றும் உணர்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். “தஹத்ண்ய்ண்ந்ஹய்ற்ட்ஃள்ன்ல்ங்ழ்ள்ற்ஹழ்ழ்ஹத்ண்ய்ண்”  என்ற பெயரில் அவர் தனது டுவிட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளார்.

முதன்முதலாக சமூக வலைதளத்தில் இணைந்தது குறித்து ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டுவிட்டரில் இணைந்தது உற்சாகமாக இருக்கிறது. இந்த சமூக வலைதளம் மூலம் ரசிகர்களை தொடர்பு கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்த சில மணி நேரங்களுக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் அவரது வலைப் பக்கத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.