மே 6 – இணைய வர்த்தகத்தில் சிறந்து விளங்கும், அமேசான் நிறுவனம், ‘டுவிட்டர்’ (Twitter)-ன் இணைந்து புதிய சேவையை தொடங்கியுள்ளது.
‘அமேசான்கார்ட்’ (AmazonCart) எனப் பெயரிடப்பட்டுள்ள, இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பப்பட்ட பொருட்களை டுவிட்டர் மூலமாக பதிவு செய்து பெற முடியும்.
இது பற்றி டுவிட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டுவிட்டர் மூலமாக வர்த்தக சேவை நடைபெறுவது வாடிக்கை என்றாலும், அமேசானுடன் இணைந்து நடைபெற இருக்கும், இந்த சேவை வாடிக்கையளர்களுக்கு, பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பெறுவது தொடர்பாக மிகச் சுலபமான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம், இந்த புதிய முயற்சி பற்றி தங்கள் வாடிக்கையாளர்களிடம், வலைப் பக்கங்கள் மூலமாக விளக்கங்கள் கொடுத்து வருகின்றது.
எனினும் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் நடைபெற இருக்கும் வர்த்தகம், எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.