Home கலை உலகம் ரஜினியுடன் மீண்டும் இணையும் வடிவேலு!

ரஜினியுடன் மீண்டும் இணையும் வடிவேலு!

600
0
SHARE
Ad

rajiniசென்னை, மே 6 – ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ வரும் மே 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் பூஜையுடன், மைசூரில் தொடங்கியது.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை இரண்டே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜனரஞ்சகமான முறையில் உருவாகும் இப்படத்தில் வடிவேலு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், குசேலன் படத்தில் ரஜினி, வடிவேலு கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இனங்க அந்த படத்திலும் வடிவேலு நடித்தார்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த போது, ரஜினிகாந்தை தவறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக வடிவேலு பட வாய்ப்புகள் ஏதுமின்றி இருந்தார்.

தற்போது ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் நாயகனாக மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு, ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கான வடிவேலுவிடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.