Home கலை உலகம் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பேன் – சந்தானம்

தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பேன் – சந்தானம்

586
0
SHARE
Ad

Santhanamசென்னை, மே 6 – காமெடி நடிகர் சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். பி.வி.பி. சினிமா தயாரித்துள்ளது.

நாயகனானது குறித்து சந்தானம் அளித்த பேட்டியில் கூறியதாவது, இதுவரை மற்ற கதாநாயகர்கள் படங்களில் காமெடி வேடம் செய்தேன். அறை எண் 305-ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் பிரதான வேடத்தில் நடித்தேன்.

இப்போது முதல் முறையாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கதாநாயகனாகியுள்ளேன். இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவரும் என்னை கதாநாயகன் தோற்றத்துக்கு கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டனர். படம் நன்றாக வந்துள்ளது. இம்மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

#TamilSchoolmychoice

கதாநாயகியுடன் ஆடிப்பாடி நடித்தது புது அனுபவம். கஷ்டமாகவும் இருந்தது. மற்ற நாயகர்களை கலாய்ப்பது போல் பஞ்ச் வசனங்கள் எழுதி கொடுத்துள்ளேன்.

இப்போது நானும் நாயகனாகியுள்ளேன். காமெடியனாக நடிப்பதை விட கதாநாயகனாக நடிப்பது ரொம்ப கஷ்டம். காதல்,சண்டைVallavanukku-Pullum-Aayudham-santhanam எல்லாம் செய்ய வேண்டியுள்ளது.

கதாநாயகனாக நடிக்க மேலும் சில கதைகள் வந்துள்ளது. தொடர்ந்து நாயகனாக நடிப்பேன். மற்ற நாயகர்கள் படங்களில் காமெடி வேடமும் செய்வேன்.

விஜய், அஜீத், விக்ரம், சூர்யா எல்லோரும் என்னை விட வயதில் பெரியவர்கள். அவர்களை அண்ணன் என்று தான் அழைக்கிறேன். நான் கதாநாயகன் ஆனதற்காக மற்ற நாயகர்கள் பொறாமை படவில்லை. எல்லோரும் வாழ்த்தினார்கள் என சந்தானம் கூறினார்.