Home நாடு திரேசா கோக் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு

திரேசா கோக் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு

632
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 6 – தான் தயாரித்து யூ டியூப் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் சிபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

Theresa Kok 440 x 215கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணியளவில் இங்கு ஜாலான் பங்சாரிலுள்ள ஓர் அடுக்குமாடி இல்லத்தில் இந்தக் குற்றம் புரியப்பட்டதாக நீதிமன்றத்தில இன்று கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

“ஒன்டர்ஃபுல் மலேசியா சீனப் புத்தாண்டு 2014” – ‘Onederful’ Malaysia CNY 2014” – என்ற தலைப்பிலான அந்த காணொளியை 50 வயதான திரேசா கோக் வெளியிட்டது தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 2,000 ரிங்கிட் அபராதமோ, ஓராண்டு சிறைத் தண்டனையோ விதிக்கப்பட்டால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும்.

தேச நிந்தனை சட்டம் 1948இன் கீழ் பிரிவு 4 (1) (b) இன்படி திரேசா கோக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த சட்டவிதியின்படி கூடுதல் பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது 5,000 ரிங்கிட் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

சர்ச்சைக்குரிய அந்த காணொளியின் சில பகுதிகள் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் திரேசா கோக் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அவர் அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

திரேசாவின் சார்பில் வழக்கறிஞர் சங்கரன் நாயர், கோபிந்த் சிங் டியோ, சி.பரம் ஆகியோர் அவரை பிரதிநிதித்தனர்.

செஷன்ஸ் நீதிபதி 4,000 ரிங்கிட் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் திரேசா கோக்கிற்கு ஜாமீன் வழங்கினார்.

வழக்கு அடுத்த கட்ட பரிசீலனைக்காக ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.