Home வாழ் நலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க சில வழிகள்!

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க சில வழிகள்!

810
0
SHARE
Ad

co6muiமே 8 – உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை காலை வேளையில் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர், காலை வேளையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டால், அதற்கான பலன் விரைவில் கிடைக்கும்.

தற்போது உடல் எடையை குறைக்க பல வழிகள் வந்துவிட்டன. இருப்பினும் அவற்றில் சிறந்த வழி என்னவென்று தெரியாமல் பலர் குழப்பத்தில் இருப்பார்கள்.

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், காலை வேளையில் பின்பற்ற வேண்டிய சில செயல்களை நியூயார் உடல் ஆரோக்கிய நிருவனம் பட்டியலிட்டுள்ளது. அவற்றை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையானது ஆரோக்கியமான வழியில் குறையும்.

#TamilSchoolmychoice

 

தேன் கலந்த எலுமிச்சை சாறு:

உடல் எடை அதிகம் இருப்போர், காலையில் எழுந்ததும் ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, lemonjuiceவெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் தங்கியுள்ள நச்சுக்களுடன், கொழுப்புக்களும் கரைந்து, உடல் எடை குறைவதுடன், உடலின் சக்தி அதிகரிக்கும். மேலும் செரிமான பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

தண்ணீர்:

தினமும் காலையில் பல் துலக்கியதும், அறை லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி தண்ணீர் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களானது வெளியேறிவிடும். இப்படி தொடர்ந்து செய்து வர, உடல் எடையில் மாற்றம் தெரியும்.
உடற்பயிற்சி:

காலையில் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகளில் ஒன்று தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றதும் ஜிம் அல்லது கார்டியோ போன்றவற்றை தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

excercicநடனம், ஏரோபிக்ஸ் அல்லது யோகா போன்றவற்றில் எவையேனும் ஒன்றை செய்து வந்தாலும், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, எடை குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, காலையில் இவற்றை மேற்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

காலை உணவை உண்ணவும்:

ஒரு நாளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. உடல் எடையை குறைக்க ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால் காலையில் அவசியம் சாப்பிட வேண்டும். அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை காலை வேளையில் நன்கு வயிறு நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.