சென்னை, மே 8 –ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் நாளை (9– ஆம் தேதி) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை துவங்கியது. இணையதளத்திலும் முன் பதிவு நடந்தது.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்நிலையில் சில தொழில் நுட்ப காரணங்களால் மே 9-ஆம் தேதி வெளிவாகவிருந்த ‘கோச்சடையான்’ படம் மேலும் தள்ளிப்போவதாக தகவல் வந்துள்ளது. இப்படம் மே 23-ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோச்சடையான் படம் வெளியாகாமல் போனதற்கு முக்கிய காரணம், படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என காரணமாகக் கூறியுள்ளனர்.ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்பட 6 மொழிகளில் வெளியாகிறது.
அனைத்து மொழிகளிலும் 2 டி மற்றும் 3டி வடிவங்களில் இந்தப் படம் தயாராகியுள்ளது. 2டிக்கு தனியாகவும், 3டிக்கு தனியாகவும் சென்சார் சான்ற பெற வேண்டியுள்ளது. இதில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் கோச்சடையானின் 3 டி வடிவத்துக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லையாம்.
இதைத் தான் ‘தொழில்நுட்ப காரணம்’ என்று கூறுகிறது தயாரிப்பு தரப்பு. இந்த இரண்டு மொழிகளிலுமே தமிழை விட அதிக அளவிலான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மலேசியாவில் நாளை ‘கோச்சடையான்’ படம் வெளியாகுமா? என்பது கேள்விகுறியாக உள்ளது.