Home உலகம் ரோந்து பணியில் ஈடுபட்ட வியட்நாம் கப்பலுடன், சீனக் கப்பல் நேருக்குநேர் மோதல்! 

ரோந்து பணியில் ஈடுபட்ட வியட்நாம் கப்பலுடன், சீனக் கப்பல் நேருக்குநேர் மோதல்! 

586
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_16823542119 (1)பெய்ஜிங், மே 9 – தென்சீனக் கடல் பகுதியில் வியட்நாமுக்கு அருகே 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் எண்ணெய் வளம் பற்றிய ஆய்வுப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதற்காக சீனா சில கப்பல்களை அந்த தீவுக்கு அனுப்பியது. சீனாவின் இந்த செயலுக்கு, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், போர் கப்பல்களை அனுப்பி வியட்நாம் அரசு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஹாப் மூன் என்ற கடற்பகுதியில், வியட்நாம் கடற்படை கப்பல் மீது சீனக் கப்பல்கள், நேற்று நேருக்கு நேர் மோதின. இதற்கு வியட்நாம் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து வியட்நாம் அதிகாரிகள் கூறுகையில், “சீனா, உள்நோக்கத்துடன் வியட்நாம் கப்பல் மீது தங்கள் நாட்டு கப்பல்களை மோதி பிரச்னையை பெரிதாக்குகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 சீன மீனவர்களை பிலிப்பைன்ஸ் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.இதனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.