Home உலகம் தென்னாப்பிரிக்க தேர்தல்: அதிபர் ஜேக்கப் ஜூமா முன்னிலை!

தென்னாப்பிரிக்க தேர்தல்: அதிபர் ஜேக்கப் ஜூமா முன்னிலை!

781
0
SHARE
Ad

Reckless-President-Jacob-Zumaஜோஹன்னஸ்பர்க், மே 9 – தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், தொடர்ந்து 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராகும் வாய்ப்பு ஜேக்கப் ஜூமாவுக்கு அதிகரித்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் மற்றும் 9 மாகாணங்களின் சட்டப் பேரவைகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 63 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ஜனநாயகக் கூட்டணி 22 சதவீத வாக்குகளுடன் 2-ஆவது இடத்திலும், பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி 4.8 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்திலும், இன்கத்தா சுதந்திர கட்சி 2.3 சதவீத வாக்குகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

இத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சியின் உறுப்பினர்களே தென்னாப்பிரிக்க அதிபர் மற்றும் 9 மாகாண சட்டப் பேரவை தலைவர்களை தேர்வு செய்வார்கள். தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், அக்கட்சியின் தலைவரான ஜேக்கப் ஜூமா தொடர்ந்து 2ஆவது முறையாக அதிபராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

தேர்தல் முடிவுகள் வரும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.